தேசிய செய்திகள்

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு + "||" + 2G Appeals Court adjourned for 14 days in the Delhi High Court

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி மேல்முறையீட்டு வழக்கு 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி,

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இதில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி நஜ்மி வாஜ்ரி முன்னிலையான அமர்வு முன்பு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் நேற்று நீதிபதி விடுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.