திருமணம் செய்ய பரோல் கேட்ட மும்பை தாதா அபு சலீமின் மனுவை நிராகரித்தது மும்பை உயர் நீதிமன்றம்


திருமணம் செய்ய பரோல் கேட்ட மும்பை தாதா அபு சலீமின் மனுவை நிராகரித்தது மும்பை உயர் நீதிமன்றம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:22 AM GMT (Updated: 7 Aug 2018 10:22 AM GMT)

திருமணம் செய்ய பரோல் கேட்ட மும்பை தாதா அபு சலீமின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மும்பை,

கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அபு சலீம் கடந்த 2002 செப்டம்பரில் போர்ச்சுகலில் கைது செய்யப்பட்டார். கடந்த 2005 நவம்பரில் அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதையடுத்து, 

ஆயுள் தண்டனை பெற்றுள்ள தாதா அபு சலீம் (வயது 46). நவி மும்பை பகுதியில் அமைந்துள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தானே போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மும்ப்ரா பகுதியில் வசிக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய சலீம் விரும்பினார். இதற்காக 40 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி கோரி சிறை நிர்வாகத்திடம் சலீம் விண்ணப்பித்தார். ஆனால் அபு சலீமின் பரோல் மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்தது. 

இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தில், தனக்கு பரோல் வழங்குமாறு அபு சலீம் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.  மிகவும் கொடூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் அபுசலீம் தண்டிக்கப்பட்டுள்ளதால், அவரது பரோல் மனுவை ஏற்க இயலாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story