மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம்


மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Aug 2018 12:58 PM GMT (Updated: 8 Aug 2018 12:58 PM GMT)

மும்பையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.மும்பை,


மும்பை மஹால் சாலையில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் மாலை மூன்று மணியளவில் தீ விபத்து நேரிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்மோ டேங்கர்கள் சென்றது. இதற்கிடையே வெடிப்பு சம்பவம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியது. தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். தீ எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது, இருப்பினும் கட்டுக்குள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அப்பகுதியில் அதிர்வை உணர்ந்ததாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளார்கள். விபத்து சம்பவத்தில் 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்களில் 22 பேர் சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ வெப்பம் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அதிகாரிகள் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story