தேசிய செய்திகள்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு + "||" + 4 terrorists shot dead in an encounter in JK s Baramulla

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர், 


காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படை, காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் கூட்டாக அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை பார்த்ததும், மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் அதை எதிர்கொண்டு பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கு இடையே நடந்த பயங்கர சண்டையின் முடிவில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். இதனையடுத்து அப்பகுதி பாதுகாப்பு வளைத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் மோதல் - பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 2 பேர் இறந்தனர்.
2. காஷ்மீர்: ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் விட்டு விட்டு பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
4. காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டி - “எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றும் அறிவிப்பு
காஷ்மீரில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தலில் போட்டியிட உள்ளார், மேலும் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
5. காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.