காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 3–வது கூட்டம் டெல்லியில் நடந்தது


காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 3–வது கூட்டம் டெல்லியில் நடந்தது
x
தினத்தந்தி 9 Aug 2018 11:15 PM GMT (Updated: 9 Aug 2018 11:01 PM GMT)

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 3–வது கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர் ஆணையத்தின் அலுவலகம் அமைந்துள்ள சேவா பவன் வளாகத்தில் நடைபெற்றது.

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்துக்கு ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக உறுப்பினரான நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் கேரளா, கர்நாடகம், மத்திய அரசின் பிரதிநிதிகள் என காவிரி ஒழுங்காற்றுக்குழுவில் உள்ள 8 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் ஒழுங்காற்றுக்குழுவின் தலைவர் நவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் ஜூலை 31–ந் தேதி வரையிலான நீரின் அளவு, மழையின் அளவு மற்றும் வானியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு காவிரியில் அளவுக்கு அதிகமாகவே மழை பொழிந்து உள்ளதால் எந்தப்பகுதியிலும் பற்றாக்குறை இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story