தேசிய செய்திகள்

கருப்பு பணம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்வது தொடர்பாக இந்தியா, சுவிட்சர்லாந்து ஆலோசனை + "||" + India, Switzerland discuss information sharing on black money

கருப்பு பணம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்வது தொடர்பாக இந்தியா, சுவிட்சர்லாந்து ஆலோசனை

கருப்பு பணம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்வது தொடர்பாக இந்தியா, சுவிட்சர்லாந்து ஆலோசனை
கருப்பு பணம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே ஆலோசனை நடைபெற்றது. #BlackMoney


புதுடெல்லி,


 இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, சுவிட்சர்லாந்து நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி இக்னோசியா காஸிஸ் சந்தித்து பேசிய போது கருப்பு பணம் தொடர்பாக பேசப்பட்டது என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்துக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தியர்கள் ரகசிய கணக்குகள் மூலம் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்தில் டெபாசிட் செய்வது தொடர்பான தகவல்களை பெற நீண்டகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

“கருப்பு பணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், இதுதொடர்பான தகவல்களை தானியங்கி தகவல் பரிவர்த்தனையை செயல்படுத்துதல் இருதரப்பு இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் குறித்த தகவல்களை உடனடியாக அளிப்பதற்கான இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தானியங்கி தகவல் பரிவர்த்தனை ஒப்பந்தத்திற்கான ஒப்புதலை சுவிட்சர்லாந்து பாராளுமன்ற குழு கடந்த ஆண்டு வழங்கியது.
 
உடன்படிக்கை சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் செலுத்துபவர்கள் குறித்த விவரங்களை தொடர்ச்சியாக அணுகுவதற்கு உதவுகிறது. 

பரிமாற்றம் செய்யக்கூடிய கணக்கு எண், பெயர், முகவரி, பிறந்த தேதி, வருமான வரி எண், வட்டி, ஈவுத்தொகை, காப்பீட்டுக் கொள்கைகளிலிருந்து வருமானங்கள், கணக்குகள் மற்றும் நிதி சொத்துகளின் விற்பனைக்கு வருவாய் ஆகியவற்றில் அடங்கும்.தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.
2. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.
4. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 4-வது ஒரு நாள் போட்டி: வேறு மைதானத்திற்கு மாற்றம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான, 4-வது ஒரு நாள் போட்டி வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
5. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 48 ‘விங் லூங்–2’ ஆளில்லா விமானங்களை வாங்குகிறது
சீனாவிடம் இருந்து 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது.