மராட்டியத்தில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 4 குழந்தைகள் பிறந்தன


மராட்டியத்தில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 4 குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 11 Aug 2018 9:51 PM GMT (Updated: 11 Aug 2018 9:51 PM GMT)

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி சாந்தி நகரை சேர்ந்தவர் குல்சன் அன்சாரி (வயது26).

மும்பை,

குல்சன் அன்சாரியின் கணவர் அங்குள்ள விசைத்தறியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், குல்சன் அன்சாரி மீண்டும் கர்ப்பம் ஆனார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி உண்டானது. உடனடியாக குடும்பத்தினர் அவரை அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் அடுத்தடுத்து 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் மூன்று ஆண் குழந்தைகள், ஒன்று பெண் குழந்தை ஆகும்.

4 குழந்தைகளும், தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story