காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு


காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 3:15 AM GMT (Updated: 12 Aug 2018 3:15 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்து உள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பட்டமலூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்துள்ளனர்.  அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.  இந்த தாக்குதலில் சிறப்பு அதிரடி படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேர் காயமடைந்து உள்ளனர்.  தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த தாக்குதலை அடுத்து இணையதள சேவைகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Next Story