தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல் + "||" + 1 year after Doklam, China intrudes 400m into Ladakh

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்
இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல்கள் கூறுகின்றன. #Ladakh
லடாக்,

இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.

அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் பற்றி கருத்து கூற ராணுவம் மறுத்து விட்டது.  இதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள்  சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு  நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்படியே இம்ரான் கான் செயல்படுவார்: சசிதரூர் எம்.பி
பாகிஸ்தான் ராணுவத்தின் விருப்படியே இம்ரான் கான் செயல்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
2. ரபேல் விவகாரம்: முன்னாள் அதிபர் ஹாலண்டே கருத்து குறித்து பிரான்சு அரசு விளக்கம்
ரபேல் ஒப்பந்த பிரச்சினையில் பிரான்சு முன்னாள் அதிபர் ஹோலண்டே கருத்து குறித்து அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து
இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
4. ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.