தேசிய செய்திகள்

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை + "||" + Four terrorists have been killed.Arms and ammunition recovered

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ராஜ்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்குள்ள ஒரு பகுதி ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 


தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை
பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை வெளியிட்டது.
2. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
3. ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் நடமாடியதாக தகவல் -சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் நடமாடியதாக தகவல் வெளியானது.
4. ஜம்மு காஷ்மீர்: ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...