சென்னையில் தண்ணீரை விட தங்கம் விலை மலிவு - மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் பேச்சு


சென்னையில் தண்ணீரை விட தங்கம் விலை மலிவு - மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் பேச்சு
x
தினத்தந்தி 26 Jun 2019 8:30 PM GMT (Updated: 26 Jun 2019 7:57 PM GMT)

சென்னையில் தண்ணீரை விட தங்கம் விலை மலிவாக உள்ளதாக, மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

புதுடெல்லி,

நாட்டின் தண்ணீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

மத்திய தண்ணீர் ஆணையத்தின் கணக்குப்படி, தமிழ்நாட்டில் மழை பற்றாக்குறை 41 சதவீதம் ஆகும். அதனால், முதலாவதாக சென்னை நகரம் வறண்டு போய்விட்டது. சென்னை நகர மக்களில் பெரும்பாலானோர், தண்ணீர் தேவைக்கு தண்ணீர் லாரிகளையே நம்பி இருக்கிறார்கள். ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட ஒரு டேங்கர் லாரி தண்ணீரின் விலை அதிகம். அந்த அளவுக்கு சென்னையில் தண்ணீரை விட தங்கத்தின் விலை மலிவாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கூறியுள்ளன. பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜாவும் சென்னை நகர தண்ணீர் பிரச்சினை பற்றி பேசினார்.

Next Story