சத்தீஷ்கார், ஆந்திராவுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்


சத்தீஷ்கார், ஆந்திராவுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
x
தினத்தந்தி 16 July 2019 11:22 PM IST (Updated: 16 July 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்கார், ஆந்திராவுக்கு பா.ஜனதா தலைவர்கள் புதிய கவர்னர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னராக நரசிம்மன் இருந்துவருகிறார். அவருக்கு பதிலாக ஆந்திர கவர்னராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டார்.

சத்தீஷ்கார் மாநில கவர்னர் பொறுப்பை மத்தியபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் கூடுதலாக கவனித்து வந்தார். இப்போது சத்தீஷ்கார் மாநில கவர்னராக மத்தியபிரதேச மாநில பா.ஜனதா தலைவரான அனுசுயா உகே நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.


Next Story