பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி


பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 28 July 2019 6:13 PM GMT (Updated: 28 July 2019 6:13 PM GMT)

பீகாரில் 7 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

பாட்னா,

பீகார் மாநிலம் சாரன் மாவட்டம் டாய்லா கிராமத்தில் 10 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அப்பகுதிவாசிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதி 7 பேர், தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்கள் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.


Next Story