டெல்லி-லாகூர் பஸ் சேவை நிறுத்தம் - பாகிஸ்தான் நடவடிக்கை


டெல்லி-லாகூர் பஸ் சேவை நிறுத்தம் - பாகிஸ்தான் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2019 10:45 PM GMT (Updated: 10 Aug 2019 8:45 PM GMT)

டெல்லி-லாகூர் பஸ் சேவையை நிறுத்தம் செய்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இஸ்லாமாபாத்,

டெல்லி, லாகூர் இடையே இந்திய, பாகிஸ்தான் நட்புறவு பஸ் சேவை நடைபெற்று வந்தது. 1999-ல் தொடங்கப்பட்ட இந்த பஸ் சேவை, 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. 2003-ம் ஆண்டு ஜூலை முதல் மீண்டும் பஸ் சேவை தொடங்கி நடைபெற்று வந்தது.

தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ள நிலையில், இரு தரப்பு நட்புறவு பஸ் சேவையை நிறுத்துவது என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு மந்திரி முராத் சயீத் தெரிவித்துள்ளார். இருப்பினும் டெல்லி அம்பேத்கர் மைதான பஸ் முனையத்தில் இருந்து லாகூருக்கு பஞ்சாப் சுற்றுலா மேம்பாட்டு கழக பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 2 பயணிகள் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்தியா உடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் முறைப்படி நேற்று நிறுத்திக்கொண்டு விட்டது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக உறவில் ஏற்கனவே உரசல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story