யார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ


யார் லஞ்சம் வாங்குவது என்பதில் போலீசார் இடையே சண்டை; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 13 Aug 2019 1:35 PM GMT (Updated: 13 Aug 2019 1:35 PM GMT)

யார் லஞ்சம் வாங்குவது என்பதில் 2 போலீசார் சண்டை போட்டு கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் லஞ்சம் வாங்குவதில் 2 போலீசார் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.  இதனால் போலீசார் இருவரும் தடிகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அவர்கள் மோதி கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.  அதில், போலீஸ் வாகனத்தில் இருந்து 2 போலீசார் இறங்குகின்றனர்.  அவர்களை சுற்றி 3 பேர் நிற்கின்றனர்.  இந்த நிலையில், போலீசாரில் ஒருவர் திடீரென கையால் மற்றொருவரை அடிக்கிறார்.  இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு போலீஸ்காரரை அருகே இருந்த நபர் பிடித்து இழுக்கிறார்.

இதன்பின்பு வாகனத்தில் இருந்த தடிகளை போலீசார் இருவரும் எடுத்து ஒருவரை ஒருவர் அடித்து கொள்கின்றனர்.  அவர்களை தடுக்க சுற்றி இருந்தவர்கள் முயல்கின்றனர்.  ஆனால் அந்த சமரச முயற்சி பலனளிக்கவில்லை.

தொடர்ந்து இருவரும் மோதி கொண்டனர்.  லஞ்சம் வாங்குவதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டு அது மோதலில் முடிந்துள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி எஸ்.பி. அசுதோஷ் மிஷ்ரா கூறும்பொழுது, நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது.  2 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என கூறினார்.Next Story