சுவாமி சின்மயானந்த் வழக்கு; கல்லூரி மாணவி டெல்லியில் காணப்பட்டார் என போலீசார் தகவல்


சுவாமி சின்மயானந்த் வழக்கு; கல்லூரி மாணவி டெல்லியில் காணப்பட்டார் என போலீசார் தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2019 3:40 PM GMT (Updated: 28 Aug 2019 3:40 PM GMT)

பா.ஜ.க. தலைவர் சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய பின் காணாமல் போன மாணவி டெல்லியில் காணப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

ஷாஜகான்பூர்,

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது அவரது அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் சுவாமி சின்மயானந்த்.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக்கல்லூரியின் தலைவராக இருந்து வரும் அவர் மீது அந்த கல்லூரியில் படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர் பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ வெளியான பின் அந்த மாணவி காணாமல் போய் விட்டார்.  இதுபற்றி மாணவியின் தந்தை போலீசில் நேற்று அளித்துள்ள புகாரில், எனது மகள் மற்றும் வேறு சில மாணவிகளும் பா.ஜ.க. தலைவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அவரிடம் போலீசார் காண்பித்த வீடியோ பதிவுகளில் மாணவி டெல்லியில் இருப்பது தெரிய வந்தது.  எனினும் அதன்மீது அவர் சந்தேகம் தெரிவித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளார்.  டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காணப்பட்ட அவரை தேடி போலீசார் சென்றனர்.  ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து சென்று விட்டார் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் மற்றும் உத்தர பிரதேச மகளிர் ஆணையம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

Next Story