ஹலோ ஒன்... டூ... திரீ.. மூன்று மைக்கும் வேலை செய்யவில்லை; ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்


ஹலோ ஒன்... டூ... திரீ.. மூன்று மைக்கும் வேலை செய்யவில்லை; ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்
x
தினத்தந்தி 29 Aug 2019 8:57 AM GMT (Updated: 29 Aug 2019 8:57 AM GMT)

வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது மூன்று மைக்கும் வேலை செய்யவில்லை.

வயநாடு,

வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி,  தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது அங்கு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் வேலை செய்யவில்லை. அடுத்தடுத்து 3 மைக்குகள் கொடுக்கப்பட்ட போதும் அது வேலை செய்யாததால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது. கடைசியாக 4 வது மைக்கே ராகுலுக்கு கை கொடுத்தது.

பணமதிப்பு ரத்தும், ஜி.எஸ்.டி. வரி அமலாக்கமும் நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

வயநாட்டுக்கு தான் எம்.பி.யாக வரவில்லை என்றும் மக்களில் ஒருவராக வந்துள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

Next Story