பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகையுடன் 8 நாடுகளே உள்ளன; ஜே.பி. நட்டா


பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகையுடன் 8 நாடுகளே உள்ளன; ஜே.பி. நட்டா
x
தினத்தந்தி 29 Aug 2019 1:33 PM GMT (Updated: 29 Aug 2019 1:33 PM GMT)

பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகையுடன் 8 நாடுகளே உள்ளன என அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா கூறும்பொழுது, 7 கோடி புது உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கும் நடைமுறை நடந்து வருகிறது.  அது முடிவடைந்ததும், கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக இருக்கும்.

எங்களது கட்சியில் 2.2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.  எனினும், உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியில் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது தெளிவாக தெரிந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளத்தில் சிறந்த முறையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கிடைத்தது என்று அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம்  டிசம்பரில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story