7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிவு


7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிவு
x
தினத்தந்தி 30 Aug 2019 5:34 PM GMT (Updated: 30 Aug 2019 7:32 PM GMT)

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு ஆண்டில், ஜனவரி-மார்ச் காலாண்டில் 20 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து 5.8 சதவீதமாக இருந்தது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) 7 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக 5 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது.

2017-18-ஆம் நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது 5 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 2024-25-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுக்க நம் நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சி அவசியம் என 2018-19 பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய அரசு தெரிவித்தது.

ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்தவரை அடிப்படை ஆண்டு ஒன்றின்படி கணக்கிடுவதே உண்மை நிலவரத்தை எடுத்துக்காட்டும். தற்போது பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய குறியீடுகளை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2011-12-ஆக இருக்கிறது. இதனை 2017-18-ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Next Story