கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதா? ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாஜக கண்டனம்


கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதா? ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாஜக கண்டனம்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:40 AM GMT (Updated: 31 Aug 2019 4:40 AM GMT)

ஆந்திராவில் கட்சியின் கொடி நிறத்தில் அரசு அலுவலகங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

அமராவதி,

அரசின் அனைத்து சேவைகளயும் ஒரே இடத்தில் பெறும் வகையில், கிராமங்களில் தலைமைச் செயலகம் என்ற பெயரில் புதிய  திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கிராமங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.  வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. 

இந்த நிலையில், கிராமங்களில் கட்டப்பட்டுவரும் தலைமைச்செயலக திட்ட கட்டிடங்களுக்கு, ஆந்திராவில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்படுவதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியுள்ளது.  பாஜக செய்தி தொடர்பாளர் லன்கா தினகரன் கூறும் போது, ஜெகன் மோகன் ரெட்டி அரசு, மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.

Next Story