பரூக் அப்துல்லா கைதை எதிர்த்து வழக்கு - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு


பரூக் அப்துல்லா கைதை எதிர்த்து வழக்கு - தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2019 12:15 AM IST (Updated: 18 Sept 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

பரூக் அப்துல்லா கைதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

கா‌‌ஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான முகமது அக்பர் லோன் கூறியதாவது:-

பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவை கைது செய்தது வெட்கக்கேடு. அவர் எந்த அடிப்படையில் அச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்று விளக்கம் கேட்டு, ஸ்ரீநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.

அதற்கு பதில் வந்த பிறகு, அதை ஆய்வு செய்வோம். பின்னர், பரூக் அப்துல்லா கைதை எதிர்த்தும், அவரது காவலை ரத்து செய்யக்கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story