காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு


காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 8:47 PM GMT (Updated: 25 Sep 2019 8:47 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் பதவி விலகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு, நூலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

புனே,

கேரளா மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். காஷ்மீரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்த இவர் அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்ததற்கும், அங்கு 370-வது அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

சமீபத்தில் அவர் மராட்டிய மாநில சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பின் பேரில் புனே சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற ஜெயகர் நூலகத்தில், அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருந்தார்.

அப்போது நூலக அதிகாரி அவரை தடுத்து நிறுத்தி, ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருமாறும், இது ஒரு வழக்கமான நடவடிக்கை என்றும் கூறினார். ஆனால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க கோபிநாதன் மறுத்துவிட்டார். இதனால் நூலகத்தில் நடக்க இருந்த கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டு, பின்னர் அங்குள்ள உணவு விடுதியில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Next Story