தேசிய செய்திகள்

கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு + "||" + Congress's opinion on Kashmir issue helps Pakistan - Says PM Modi

கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு

கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவுகிறது - பிரதமர் மோடி பேச்சு
கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள், பாகிஸ்தானுக்கு உதவுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
சண்டிகார்,

அரியானா சட்டசபை தேர்தலையொட்டி, கோகனா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்திய அரசியல் சட்டம், கா‌‌ஷ்மீருக்கும் பொருந்தும்படி செய்யப்பட்டது. கா‌‌ஷ்மீர் மற்றும் லடாக்கின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தவை அகற்றப்பட்டன.


ஆனால், அன்றிலிருந்து காங்கிரஸ் கட்சியும், அதைப்போன்ற பிற கட்சிகளும் வேதனையில் இருக்கின்றன. அதை குணப்படுத்துவதற்கு மருந்தே கிடையாது. தூய்மை இந்தியா, துல்லிய தாக்குதல் போன்றவற்றை பேசினாலே காங்கிரசுக்கு அந்த நோய் வந்து விடுகிறது. அதிலும், பாலகோட் என்ற பெயரை எடுத்தாலே நோய் அதிகரித்து விடுகிறது.

காங்கிரசுக்கு ஏன் இந்த வேதனை ஏற்படுகிறது என்பது நாட்டுக்கு தெரியும். இது, யார் மீதான அனுதாபம் என்றும் தெரியும். கா‌‌ஷ்மீர் பற்றிய காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள், யாருக்கு உதவுகின்றன? அதனால் பலன் அடைவது யார்? அவை எங்கே பயன்படுத்தப்படுகின்றன? என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். (பொதுமக்கள் ‘பாகிஸ்தான்’ என்று குரல் கொடுத்தனர்).

சரியான விடை. பாகிஸ்தான்தான். இப்போது, பாகிஸ்தான் விரும்புகிற கருத்தை ஏன் பேசுகிறீர்கள் என்பதற்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை உலக அரங்கில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது. தனது நிலைப்பாட்டை வலுவாக்க பார்க்கிறது. இந்திய மக்கள் விரும்புவதை சொல்வதற்கு காங்கிரஸ் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

என்னை குறிவைத்து எத்தனையோ பொய்களை, மோசமான வார்த்தைகளை காங்கிரஸ் கூறுகிறது. அவற்றை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது.காங்கிரசுக்கு பாகிஸ்தானுடன் அப்படி என்ன ஒரு ‘கெமிஸ்ட்ரி’? இந்த தேர்தலில் இதற்கு விடை காண வேண்டும்.

நீங்கள் மோடிக்கு எதிராக எத்தனையோ பொய்களை கூறலாம். மக்களின் ஆசீர்வாதம் இருக்கும்வரை அவை என்னை ஒன்றும் செய்யாது. ஆனால், பாரத மாதாவை மதியுங்கள். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் விவகாரங்களில் எல்லையை தாண்டாதீர்கள்.காங்கிரசுக்கு நாட்டின் ஒற்றுமை மீதோ, அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்டம் மீதோ அக்கறை இல்லை. அவர்கள் மீது நீங்கள் அக்கறை காட்ட வேண்டுமா? இந்த தேர்தலில் அவர்களை திருப்பி அனுப்புங்கள். வீட்டில் ஓய்வெடுக்க சொல்லுங்கள்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பா. ஜனதா சொல்வது மேக் இன் இந்தியா, ஆனா வாங்குவது சீனாவில்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சொல்வது மேக் இன் இந்தியா, ஆனால் வாங்கிவது சீனாவில் இருந்து என பா.ஜனதா ஆட்சியை ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்
3. கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி
பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
4. 2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? - ப.சிதம்பரம்
2015 முதல் நடைபெற்ற ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமரிடம் பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா விளக்கம் கேட்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
5. ஐகோர்ட்டு பற்றிய கருத்து: மத்தியஅரசு வக்கீலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
ஐகோர்ட்டு பற்றிய மத்திய அரசு வக்கீலின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.