அசாமில் காட்டு யானை தாக்கி 5 பேர் சாவு


அசாமில் காட்டு யானை தாக்கி 5 பேர் சாவு
x
தினத்தந்தி 30 Oct 2019 8:06 PM GMT (Updated: 30 Oct 2019 8:06 PM GMT)

அசாமில் காட்டு யானை தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கோல்பாரா,

அசாமின் கோல்பாரா மாவட்டத்துக்கு உட்பட்ட கொய்னாகுச்சி வனப்பகுதியில் வசித்து வரும் யானை ஒன்று சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்தது. அடிக்கடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்த வந்த அந்த யானைக்கு ‘லேடன்’ என பெயரிட்டு மக்கள் அழைத்து வந்தனர்.

இந்த யானை நேற்று முன்தினம் முதல் அருகில் உள்ள கிராமங்களில் வெறியாட்டம் போட்டு வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் கண்ணில் பட்ட அனைவரையும் தாக்கி வருகிறது. இதில் 70 வயது முதியவர் ஒருவர், 3 பெண்கள் மற்றும் 11 வயது சிறுவன் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.

யானை தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் கோல்பாரா மாவட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பல்வேறு பகுதிகளில் அவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story