காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து


காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 8 Nov 2019 7:17 AM IST (Updated: 8 Nov 2019 7:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்லும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

காஷ்மீரில் குளிர்காலம் ஆரம்பமானதையடுத்து பல மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் பிர் பாஞ்சால் மலைகளில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவின் காரணமாக மொகல் சாலை மூடப்பட்டது. மேலும் காஷ்மீரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை செல்ல இருந்த 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவின் காரணமாக  வெவ்வேறு சம்பவங்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story