தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு + "||" + Opposition to a central minister who went to see the impact of the storm in West Bengal

மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு

மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு
மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் ‘புல்புல்’ புயல் தாக்குதலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரண நிதி அளிக்கவில்லை என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார். இதனால் மத்திய மந்திரிகள் மீது அவருடைய கட்சியினர் ஆத்திரத்தில் உள்ளனர்.


கடந்த 13-ந் தேதி, புயல் பாதித்த தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்துக்கு சென்ற மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி தேவஸ்ரீ சவுத்ரி, அதே மாவட்டத்துக்கு சென்றார். கொசபா என்ற இடத்தை அடைந்தபோது அவரது காரை திரிணாமுல் காங்கிரசார் தடுத்து நிறுத்தினர். ‘திரும்பிப் போ’ என்று கோஷமிட்டனர். பின்னர், போலீசார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்
மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
2. இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று கூறி உள்ளார்.
3. மேற்கு வங்காளத்தை ‘புல்புல்’ புயல் தாக்கியது; 10 பேர் பலி - முதல்மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் கடலோர பகுதிகளில் புல் புல் புயல் ருத்ர தாண்டவமாடி விட்டது. புயல், மழையில் 10 பேர் பலியாகினர். முதல்-மந்திரி மம்தாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
4. மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ - 15 பேர் காயம்
மேற்கு வங்காளத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்தனர்.