உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக முடியாததால் சிவசேனா தொண்டர் தற்கொலை முயற்சி


உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக முடியாததால் சிவசேனா தொண்டர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 24 Nov 2019 8:49 PM GMT (Updated: 24 Nov 2019 8:49 PM GMT)

உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக முடியாததால் சிவசேனா தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மும்பை,

மராட்டியத்தில் ஒரே இரவில் நடந்த அதிரடி அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து, பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததால், சிவசேனாவின் ஆட்சி கனவு தகர்ந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆவார் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த வாஷிம் மாவட்டம் உமரி கிராமத்தை சேர்ந்த அக்கட்சி தொண்டர் ரமேஷ் பாலு ஜாதவ் என்பவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை அறிந்ததும் கடும் விரக்தி அடைந்து தனது கைகளை பிளேடால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story