6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்


6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்
x
தினத்தந்தி 24 Nov 2019 9:14 PM GMT (Updated: 24 Nov 2019 9:14 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் 6 வாகனங்களை நக்சலைட்டுகள் எரித்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். திமடல்வாடா கிராமம் அருகே கவாசி சிங்கா (வயது 40), பொடியம் ஆய்தா (42), மட்கம் சோம்டா (22) ஆகிய 3 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். சுக்மா நகரில், பொடியம் சோம்டி (24), மட்வி முகே (27) ஆகிய 2 பெண் நக்சலைட்டுகள், போலீஸ் அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர்.

இதற்கிடையே, நாராயண்பூர் மாவட்டத்தில் மடோனார் கிராமத்தில் சாலை போடும் இடத்துக்கு சென்ற நக்சலைட்டுகள், அங்கிருந்த 4 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் எந்திரம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர்.

Next Story