மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 41 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது


மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 41 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது
x
தினத்தந்தி 26 Nov 2019 7:03 AM GMT (Updated: 26 Nov 2019 7:03 AM GMT)

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று, தனது வரலாற்றில் 41 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

மும்பை

நேற்று மாலை சென்செக்ஸ் 40 ஆயிரத்து 916 புள்ளிகள் என்ற நல்ல உயர்வுடன், வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத வகையில் 41 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்துடன் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, நேற்று மாலை 12,079 புள்ளிகளுடன் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. இன்று காலை சற்று அதிகரித்து 12,119 புள்ளிகளுடன் தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

வங்கி, தகவல் தொழில்நுட்பம், மருந்தகம், உலோகம் மற்றும் எரிசக்தி பங்குகள் இன்று லாபத்தை ஈட்டின. சென்செக்ஸ் பங்குகளில் டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் மற்றும் ஆசிய பெயிண்ட்ஸ் 1% முதல் 1.6% வரை உயர்ந்துள்ளன.

யெஸ் பேங்க், ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்டவற்றின் பங்குகள், நல்ல உயர்வுடன் விற்பனையாகி வருகின்றன. ஜீ தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சுபாஷ் சந்திரா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் 6 விழுக்காடு அளவிற்கு ஏற்ற-இறக்கத்துடன் விற்பனையாகின்றன.

Next Story