காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகில் வெடிகுண்டு தாக்குதல் ; இருவர் படுகாயம்


காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகில் வெடிகுண்டு தாக்குதல் ; இருவர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:54 AM GMT (Updated: 26 Nov 2019 11:54 AM GMT)

காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story