மராட்டிய மாநில விவகாரம்: ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல் - ப.சிதம்பரம் கண்டனம்


மராட்டிய மாநில விவகாரம்: ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல் - ப.சிதம்பரம் கண்டனம்
x
தினத்தந்தி 27 Nov 2019 9:30 PM GMT (Updated: 27 Nov 2019 8:30 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் நடந்த விவகாரம் ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல் என ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 23-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை, மராட்டிய மாநிலத்தில் அரசியல் சட்டம் அதிர்ச்சிகரமாக மீறப்பட்டது. இந்த சம்பவம், அரசியல் சட்ட தினத்தையொட்டி, மக்களின் மனதில் எப்போதும் நினைவில் இருக்கும். இந்த சம்பவம், ஜனாதிபதி பதவி மீதான தாக்குதல். மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ய ஜனாதிபதியை அதிகாலை 4 மணிக்கு எழுப்பி, கையெழுத்திட வைத்துள்ளனர். காலை 9 மணிவரை ஏன் காத்திருக்க முடியவில்லை?

இந்த நேரத்தில், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு எனது வாழ்த்துகள். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் அடிப்படையில், கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியை கண்டவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

தனிப்பட்ட கட்சி நலன்களை ஒதுக்கிவிட்டு, 3 கட்சிகளின் பொதுநலன்களை அமல்படுத்த ஒன்றாக பாடுபடுமாறு இந்த கூட்டணியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story