ஆர்.எஸ்.எஸ்.சின் ஆன்மாதான் பிரக்யாசிங் கருத்து; ராகுல் காந்தி சொல்கிறார்


ஆர்.எஸ்.எஸ்.சின் ஆன்மாதான் பிரக்யாசிங் கருத்து; ராகுல் காந்தி சொல்கிறார்
x
தினத்தந்தி 28 Nov 2019 11:13 PM GMT (Updated: 28 Nov 2019 11:13 PM GMT)

நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் கூறியது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

புதுடெல்லி, 

பயங்கரவாதி பிரக்யாசிங் கூறிய கருத்துகள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் இதயமும், ஆன்மாவும் ஆகும். அதை மறைக்க முடியாது. அது எப்படி இருந்தாலும் வெளிவந்தே தீரும். அவர்கள் காந்தியை எந்த அளவுக்கு வழிபடுகிறார்கள் என்பது பிரச்சினையே அல்ல. இதுதான் அவர்களது ஆன்மா.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story