மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம்


மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம்
x
தினத்தந்தி 29 Nov 2019 3:29 PM GMT (Updated: 29 Nov 2019 10:49 PM GMT)

மக்களவையில் ஆயுத சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒருவர் அதிகபட்சம் 2 துப்பாக்கிதான் வைத்திருக்க முடியும்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று ஆயுத சட்டத்திருத்த மசோதாவை உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

தற்போது ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படுகிறது. 3-வது துப்பாக்கியை 90 நாட்களுக்குள் அரசிடமோ, விற்பனையாளரிடமோ திரும்ப ஒப்படைக்க வேண்டும். கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரிப்பது, விற்பது போன்ற குற்றங்களுக்கு வழக்கமான ஆயுள் தண்டனைக்கு (14 வருடங்கள்) பதிலாக ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது துப்பாக்கி அனுமதி (லைசென்ஸ்) 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவது 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதுடன், மின்னணு முறையில் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story