திருமண கொண்டாட்டத்தில் விபரீதம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து வீடியோகிராபர் பலி


திருமண கொண்டாட்டத்தில் விபரீதம்: துப்பாக்கி குண்டு பாய்ந்து வீடியோகிராபர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2019 7:49 PM GMT (Updated: 29 Nov 2019 7:49 PM GMT)

பீகாரில் திருமண கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து வீடியோகிராபர் ஒருவர் பலியானார்.

சமஸ்திப்பூர்,

பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே காலனியில் நேற்று முன்தினம் இரவு ஒரு திருமணம் நடந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது உற்சாக மிகுதியில் உறவினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு எதிர்பாராதவிதமாக, திருமணத்தை வீடியோவில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story