பாஸ்போர்ட் மோசடி வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


பாஸ்போர்ட் மோசடி வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 25 Dec 2019 9:15 PM GMT (Updated: 25 Dec 2019 8:08 PM GMT)

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி பரூக் டக்லா (வயது 58). இவர், கடந்த 1991-ம் ஆண்டு, முஷ்டாக் முகமது மியான் என்பவர் பெயரில், மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றார். அதை பயன்படுத்தி, துபாயிலும், இதர வளைகுடா நகரங்களிலும் குடியிருந்தார். அங்கு தாவூத் இப்ராகிமுக்கு ஆதரவான காரியங்களிலும், 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்கு உடந்தையாகவும் செயல்பட்டார்.

அதே போலி பெயரில், துபாயில் பாஸ்போர்ட்டை புதுப்பித்தார். கடந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி, அதே பாஸ்போர்ட்டுடன் டெல்லிக்கு வந்திறங்கியபோது, அவர் கைது செய்யப்பட்டார். பாஸ்போர்ட் மோசடி வழக்கில் அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக மும்பையில் உள்ள கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், அவரது குற்றச்செயல்களை பட்டியலிட்டுள்ளது.

Next Story