டெல்லியில் கடும் குளிர்: 4.2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் வெப்ப நிலை சென்றது


டெல்லியில் கடும் குளிர்: 4.2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் வெப்ப நிலை சென்றது
x
தினத்தந்தி 27 Dec 2019 6:21 AM GMT (Updated: 27 Dec 2019 6:21 AM GMT)

டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர் நிலவுகிறது. நடப்பு சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப நிலை 4.2 டிகிரி செல்சியாக பதிவானது. அதிகபட்ச வெப்ப நிலை 13.4 டிகிரி செல்சியசாக பதிவானதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  தற்போதைய குளிரான நிலையே அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடரும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கிய கடுமையான குளிர், 13 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. 1997 ஆம் ஆண்டு 17 நாட்கள் கடும் குளிர்காலம் நிலவியது. அதன்பிறகு நடப்பு ஆண்டு குளிர் காலம் நீண்ட நாட்கள் நீடிக்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு இந்த குளிர் நீடிக்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story