காங்கிரஸ் 134-ஆவது நிறுவன தினம்: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி


காங்கிரஸ் 134-ஆவது நிறுவன தினம்: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி
x
தினத்தந்தி 28 Dec 2019 2:54 AM GMT (Updated: 28 Dec 2019 3:55 AM GMT)

இந்திய காங்கிரஸ் கட்சியின் 134- வது நிறுவன தினமான இன்று, நாடு முழுவதும் பேரணி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய காங்கிரஸ் கட்சியின் 134- வது நிறுவன  தினமான இன்று, நாடு முழுவதும்  பேரணி நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.  ”அரசியலமைப்பை காப்பாற்றுவோம்- இந்தியாவை காப்பாற்றுவோம்” என்ற  பெயரில் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்துகின்றனர். 

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் கொடியை ஏற்றும்  அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி , பேரணியை தொடங்கி வைக்கிறார். அசாமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,   அங்கு உரையாற்றுகிறார். 

அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்ளும் பிரியங்கா காந்தி வத்ரா, கட்சியினர் மத்தியில் பேசுகிறார். அனைத்து மாநில தலைநகர்களிலும், இந்தியாவை காப்போம், அரசியலமைப்பை காப்போம்” என்ற பெயரில் மாநில காங்கிரஸ் பேரணி நடத்தும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார். 

நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இன்றைய பேரணியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story