தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,000 வாகனங்களுக்கு அபராதம் + "||" + Fines for violating curfew in Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,000 வாகனங்களுக்கு அபராதம்

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,000 வாகனங்களுக்கு அபராதம்
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 2 ஆயிரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவிலும் தனது கோர முகத்தை கொரோனா தொற்று காட்ட தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


ஆனால் பொதுமக்கள் சிலர் ஊரடங்கு உத்தரவையும், கொரோனா எச்சரிக்கையையும் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், ’ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகளையும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும், இதனை மீறக்கூடிய பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் நேற்று 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 ஆயிரம் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவை பின்பற்றாமல் தெருவில் சுற்றிய வாலிபர்களுக்கு தோப்புக்கரணம், முட்டி போடுதல் போன்ற நூதன தண்டனையும் வழங்கப்பட்டது.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். ரிக்‌ஷா, இருசக்கர வாகன ஓட்டிகளின் டயர்களில் காற்றை பிடுங்கி எச்சரித்து அனுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி
ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; ராகுல் காந்தி வேண்டுகோள்
ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் வெளி மாநில தொழிலாளர்கள்!
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர்.
5. ஆன்மிக சுற்றுலா சென்ற நேரத்தில் ஊரடங்கு: புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் தவிப்பு
ஆன்மிக சுற்றுலா சென்ற நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் தவித்து வருகின்றனர்.