தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத் + "||" + Yogi Adityanath viewed the construction work of the Rama Temple in Ayodhya

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்
லக்னோ,

அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்க “ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் கடந்த 10ந் தேதி அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. கொரோனா வருடங்களுக்கு மத்தியிலும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்று ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசை நேரில் சந்தித்து கட்டுமான பணிகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ராம ஜென்ம பூமியில் மரக்கன்று ஒன்றை நட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் மதியம் கோண்டா மாவட்டத்தில் இருந்து அயோத்திக்கு சென்ற யோகி ஆதித்யநாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் லாலு சிங் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர்கோவில் கட்டுமான பணி 15-ந்தேதி தொடக்கம்
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நாட்டினார்.
2. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்; அறக்கட்டளை தகவல்
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
3. அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்
அயோத்தியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல், அடுத்த மாதம் 26-ந்தேதி நாட்டப்படுகிறது.
4. அயோத்தியில் களைகட்டிய தீப உற்சவம் மிகப்பெரிய வெற்றி - யோகி ஆதித்யநாத் பெருமிதம்
அயோத்தி நகரில் நடந்த தீப உற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
5. அயோத்தியில் களை கட்டிய தீபாவளி- சரயு நதிக்கரையில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.