இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு


இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு
x
தினத்தந்தி 6 July 2020 5:03 PM IST (Updated: 6 July 2020 5:03 PM IST)
t-max-icont-min-icon

இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்தை நடைபெற்றது.

அப்போது, இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதல்களையும் ஒப்புதல்களையும் பெற்று அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. நாடுகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடு வேற்றுமையாக மாறிவிடக்கூடாது என்று இருதரப்பிலும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இரு தரப்பும்  படைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள்  நடைபெறாமல் இருக்கவும் இரு தரப்பிலும் உறுதி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Next Story