தேசிய செய்திகள்

இந்தியாவில் இன்று 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல் + "||" + Corona infection confirmed in 16,946 people in India today - Union Health Department

இந்தியாவில் இன்று 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் இன்று 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 17,652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,13,603 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 18 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரத்து 305 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 7,43,191 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை; லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை
ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
3. இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியா முழுவதும் இதுவரை 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்வு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா- சீனா இடையே இன்று ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா இடையே ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது