தேசிய செய்திகள்

மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா; மத்திய அரசு தகவல் + "||" + New type of corona in Maharastra, Kerala;Central Government Information

மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா; மத்திய அரசு தகவல்

மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா; மத்திய அரசு தகவல்
மராட்டியம், கேரளாவில் உருமாறிய 2 புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
உருமாறிய கொரோனா
இந்தியாவில் மராட்டியம், கேரளா ஆகிய 2 மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் அங்கு என்440கே, இ484கே ஆகிய 2 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களே காரணம் என நம்புவதற்கில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

தாக்கம் அதிகரிக்க புதிய வைரஸ் காரணமா?

இதையொட்டி மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று கூறியதாவது:-

புதிய வகை கொரோனா வைரஸ்களான என்440கே, இ484கே ஆகிய இரண்டும் மராட்டியத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதே போன்று கேரளாவிலும், தெலுங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் உள்ளது. அதே நேரத்தில் மாட்டியம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும், சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வைரஸ்கள்தான் காரணம் என்று விஞ்ஞானபூர்வமாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.

மரபணு வரிசைபடுத்தல்
வைரஸ் பிறழ்வுகள் தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,500 திரிபுகள் மரபணு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. இப்படி மரபணுக்களை வரிசைபடுத்துகிறபோது, நாங்கள் வைரசின் தன்மையில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். பிறழ்வுகளை கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது - தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. ‘கோவிஷீல்டு' தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்கக் கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனாவுக்கான ‘கோவிஷீல்டு' தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்று அறிவிக்க வேண்டும். அந்த ஊசியை போட்டதால் பாதிக்கப்பட்ட தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தன்னார்வலர் தொடர்ந்த வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை உயர்வு குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
மக்களின் மீது மத்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
4. புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5. விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம்: மத்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு
விவசாயிகள் போராட்டத்தை கையாளும் விதம் குறித்து இந்திய அரசுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.