கொரோனா தொற்று பரவலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2021 5:50 PM GMT (Updated: 11 May 2021 5:50 PM GMT)

இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும், ஆறு மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளும் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட 16 மாநிலங்களில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும், மராட்டியம், உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், அரியானா, தெலுங்கானா, உள்ளிட்ட 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவருவதாகவும் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். 

Next Story