தேசிய செய்திகள்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஊரடங்கு காரணமாக நாளை முதல் தரிசன நேரம் மாற்றம் + "||" + Darshan time changed from tomorrow at Srikalahasti Shiva Temple Due to curfew

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஊரடங்கு காரணமாக நாளை முதல் தரிசன நேரம் மாற்றம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஊரடங்கு காரணமாக நாளை முதல் தரிசன நேரம் மாற்றம்
ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை முதல் 3 மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி,

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டும், பக்தர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை, 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவிலில் நடக்கும் மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் பக்தர்களின்றி கோவில் தேவஸ்தானம் சார்பில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக, இணைய தளம் மூலம் ராகு-கேது சர்ப தோஷ பூஜைகள் உள்பட 12 விதமான ஆர்ஜித சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். பக்தர்கள் அனைவரும் இணையதளம் மூலம் அவர்களுக்கு வேண்டிய சேவைகளுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தி, அவர்கள் பெயர் மற்றும் கோத்திரம் பெயர்களுடன் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் குறித்து 08578 -222240 தொலைபேசி மூலம் தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம் என்று ஸ்ரீ காளஹஸ்தி கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட வாகன ஓட்டிகள்
ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் வலம் வருகின்றனர்.
2. கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு
கொரோனா ஊரடங்கை மீறியதாக 153 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3. ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கைத்தொழில்களில் ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள்
ஊரடங்கு கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள், கைத்தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
4. ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

அதிகம் வாசிக்கப்பட்டவை