தேசிய செய்திகள்

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Odisha 8,032 people have recovered from corona today

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
ஒடிசா மாநிலத்தில் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைகிறது. இன்று ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 6,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடிசாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,37,226 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ஒடிசாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,167 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,032 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,64,673 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 69,333 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 8 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு
தமிழகம் முழுவதும் தற்போது 69,372 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 124 பேருக்கு கொரோனா; 398 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 2,091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 251 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் தற்போது 3,562 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் இன்று 11,832 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகத்தில் தற்போது 1,30,872 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் தற்போது 78,780 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.