தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு + "||" + J&K Special Police Officer, Wife Shot Dead At Home By Terrorists

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- சிறப்பு போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு போலீஸ் அதிகாரியின் இல்லத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதியில் சிறப்பு போலீஸ் அதிகாரியான பயஸ் அகமது என்பவர் தனது மனைவி ராஜ பேகம் மற்றும் மகள் ராஃபியாவுடன் வசித்து வருகிறார்.  

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில்  சிறப்பு போலீஸ் அதிகாரியின் இல்லத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு போலீஸ் அதிகாரி பயஸ் அகமது மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகள் ராஃபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் எங்காவது பதுங்கியுள்ளார்களா? என தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதேநாளில் சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் மேலும் 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு - அரசு ஊழியர்கள் 6 பேர் பணி நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 6 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
3. ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
4. அசாமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
அசாம் மாநிலத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.