கொரோனா பாதிப்பு; இந்தியா-வங்காளதேச எல்லை மூடல் அடுத்த 14 நாட்களுக்கு நீட்டிப்பு


கொரோனா பாதிப்பு; இந்தியா-வங்காளதேச எல்லை மூடல் அடுத்த 14 நாட்களுக்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2021 12:30 PM GMT (Updated: 29 Jun 2021 12:30 PM GMT)

டெல்டா வகை கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்தியா உடனான எல்லை மூடல் உத்தரவை அடுத்த 14 நாட்களுக்கு வங்காளதேசம் நீட்டித்துள்ளது.



டாக்கா,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் நாடு முழுவதும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  கடந்த ஏப்ரல் 26ந்தேதிக்கு பின் இந்தியாவுடனான எல்லையை 2 வாரங்களுக்கு வங்காளதேசம் மூடியது.

டெல்டா வகை கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனால், பயணிகளின் போக்குவரத்து எல்லை பகுதியில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும், சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று, மருத்துவம் சார்ந்த இயக்கங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வங்காளதேச எல்லை பகுதிக்குள் நுழைய 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா பரிசோதனையில் தொற்றில்லை என்ற சான்றிதழை பயணிகள் உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


Next Story