ஆப்கானிஸ்தானில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 200 பேர் சிக்கி தவிப்பு: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி


ஆப்கானிஸ்தானில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 200 பேர் சிக்கி தவிப்பு: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 19 Aug 2021 2:03 AM GMT (Updated: 19 Aug 2021 2:03 AM GMT)

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 150 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 200 பேர் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிப்பதாக மேற்கு வங்காள அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசுடன் தனது அரசு ஒருங்கிணைந்து செயல்படும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்காளத்தின் கலிம்பாங் மற்றும் தெராய் நகரங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் தற்போது அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை திரும்ப அழைத்து வருமாறு தலைமை செயலாளர் வெளியூர் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுவார். ஆப்கானிஸ்தானின் நெருக்கடி ஒரு மிகப்பெரிய பிரச்சனை. எனினும் நாம் முதலில் இந்தியர்களின் பாதுகாப்பை கவனிக்க வேண்டும்" என கூறினார்.

Next Story