பெங்களூருவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 16 பேருக்கு கொரோனா


பெங்களூருவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 16 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sep 2021 8:13 PM GMT (Updated: 4 Sep 2021 8:13 PM GMT)

பெங்களூருவில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படிக்கும் 16 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு உரமாவில் உள்ள நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், தாசரஹள்ளி மண்டலத்தில் அமைந்திருக்கும் சிக்கபானவாராவில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படிக்கும் 16 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒரு மாணவிக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மேலும் 42 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அந்த கல்லூரியில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story