இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து சரிவு


இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து சரிவு
x
தினத்தந்தி 4 Oct 2021 4:02 AM GMT (Updated: 4 Oct 2021 4:02 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில் பரவல் தொடர்ந்து குறைகிறது. இறப்பு, கட்டுக்குள் இருந்து வருகிறது. நேற்று 22 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

இந்த எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சரிந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  20,799- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து மேலும் 26,718- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 180- பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 458- ஆக உள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247- ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 997-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 90 கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

Next Story